பம்பலப்பிட்டி – காலி வீதியில் உந்துருளியில் பயணித்த காவற்துறை அதிகாரியொருவர் மீது வௌ்ளை நிற டிபென்டர் வாகனமொன்று மோதி தப்பிச் சென்றுள்ளது.
பொரளை காவற்துறையின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர் பணிநிமித்தம் கொள்ளுபிட்டி காவல் நிலையம் நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் , இதன் போது காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தினை ஏற்படுத்தி தப்பிச் சென்ற டிபென்டர் வாகனத்தை தேடி தற்போதைய நிலையில் சிசிடிவி காட்சிகள் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.