Loading...
குரோஷியாவில் திடீரென வீசிய சூறாவளியினால் பொது சொத்துக்கள் மற்றும் பொது மக்களின் உடமைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
அட்ரியாடிக் கடற்கரை பகுதியில் நேற்று (23) மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி சூறையாடியது.
இதனால் வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதோடு பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Loading...
இதனையடுத்து போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதித்து அட்ரியாடிக் நகர நிர்வாகம் உத்தரவிட்டது.
அத்தோடு குறித்த சூறாவளியினால் ஏற்பட்ட சொத்து சேதம் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில் மீட்பு படையினர் வீதிகளில் வீழ்ந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Loading...