போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள இரண்டு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இது குறித்து அடுத்த வாரம் ஜனாதிபதி இறுதி தீர்மானத்தை எடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை அதிகாரிகள் ஏற்கனவே தூக்கு மரத்திற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து, அதனை புதுப்பித்துள்ளனர்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவோர் அலுகோசு பணியில் இணைத்து கொள்ளப்பட உள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசியுள்ளதுடன் துரிதமாக தூக்கு தண்டனையை அமுல்படுத்த போவதாக கூறியுள்ளார்.
முன்கூட்டியே அறிவிக்காமல், குற்றவாளி ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இதன் பின்னர், அது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கடும் மரண பீதி ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தரப்புத் தகவல்கள் கூறுகின்றனர்.