கிளிநொச்சி போராட்டத்திற்கு பலதரப்புகளும் ஆதரவு தெரிவித்து வரும் வேளையில் சிறிதமிழீழ விடுதலை இயக்கம்(சிறிரெலோ) கட்சியும் பூரண ஆதரவை வழங்குகிறது வலிந்து காணாமல் ஆக்கபட்ட உறவுகளால் நாளையதினம் முன்னெடுக்கபடவுள்ள போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் ஆதரவை அளித்துவருகின்றனர்.
ஜக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகின்ற நிலையில் இலங்கைக்கு மீண்டும் காலஅவகாசம் வழங்கபடகூடாது என்று தெரிவித்தும், கடத்தபட்டு காணாமல் போனவர்களின் நிலையை தெரியபடுத்தகோரியும் எதிர்வரும் 25 ம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஒன்று மேற்கொள்ளபடவுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தின் (சிறிரெலோ) செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் அறிவித்துள்ளார் என்பதுடன் அனைத்து தரப்பினரையும் கட்சி பேதமின்றி தமது உறவுகளை தேடி நிற்கும் எம் தாய்மார்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்து போராடும் எம் உறவுகளின் கண்ணீர் துடைக்க அனைவரும் ஒன்றினையுமாறும் வேண்டியுள்ளார்.