தேர்தல் தொடர்பாக கூட்டணி அமைப்பதில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் தொடர்ந்தும் இழுபறிநிலை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் தலைவர் ஜனாதிபதி மைத்திரியா – மஹிந்தவா என்பதிலும் இரு தரப்பிற்குமிடையில் முரண்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இக்குழப்பநிலைகள் குறித்து ஆராய இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று இரவு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
எனினும் இக்கூட்டத்தில் இரு கட்சிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையில் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் தொடர்ந்தும் கூட்டணி குறித்த இழுபறிநிலை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.