Loading...
கனடாவில் பரவலாக வீசும் பலத்த காற்று காரணமாக சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
குறிப்பாக ரொறொன்ரோ மாகாணத்தில் மணிக்கு 90 தொடக்கம் 110 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென சுற்றுச்சூழல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன் தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு ஒன்ராறியோவில் காலநிலை தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதோடு, நாளை காலை வரை நீடிக்கலாம் என சுற்றுச்சூழல் திணைக்களம் கூறியுள்ளது.
Loading...
மேலும், இன்றிரவு வெப்பநிலை மறை 7 பாகை செல்சியஸ் குறைந்த நிலைக்குச் செல்லலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரவு நேர வாகன பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading...