Loading...
புத்தளத்தில் பொலிஸார் பயணித்த ஜீப் வண்டி விபத்திற்குள்ளானதில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடு பொலிஸார், ஆண்டிகம பிரதேசத்துக்குச் சென்று மீண்டும் திரும்பிய போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்துக்கு வழிவிட முற்பட்ட போது, ஜீப் வண்டியில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Loading...
இதனால் வாகனம், உப்பளவத்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகி வடிகாலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
இதில் பயணித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்து ஆனமடு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Loading...