பதுளை மாவட்டத்திலிருந்து கலால் திணைக்களத்தினர் இருபது இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாவை அரசுக்கான வறுமானமாகப் பெற்றுள்ளனர்.
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை முற்றும் பாவனை ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மூலமாக இந்த வறுமானம் கிடைத்துள்ளது.
பதுளை மாவட்ட கலால் திணைக்கள பொறுப்பாளர் கப்பில விஜயசிங்கவிடம் வினவியபோதே “சட்டவிரோத கசிப்பின் மூலமாக மட்டும் இருபது இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாவை அரசுக்கு வறுமானமாகப் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
அத்துடன்மேலதிக சட்டரீதியான மதுபான விற்பனை நிலையங்களை டென்டர் மூலம் பெற்றுக்கொடுக்கும் வகையில் இரண்டாயிரம் மில்லியன் ரூபாவையும் பெற்றுள்ளோம். மேலும் எமக்கு கிடைத்து வரும் தகவல்களையடுத்து குறிப்பிட்ட இடங்களில் சுற்றி வலைப்புக்களை மேற்கொண்டுகசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களைக் கண்டுபிடித்து சம்மந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளோம்.
கடந்த ஆறு மாதங்களில் 724 சுற்றி வலைப்புக்களை மேற்கொண்டுள்ளோம். இச் சுற்றி வலைப்பில் கைது செய்யப்பட்டவர்கள் பதுளை, பசறை, பண்டாரவளை, வெலிமடை அகிய இடங்களின் மஜிஸ்ரேட் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இந் நீதிமன்றங்கள் ஊடாகவே இருபது இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா அபராதமாக விதிக்கப்பட்டது. இவ் அபராதம் அரசுக்கு பெற்றுக்கொடுத்த வறுமானமேயாகும்” எனத் தெரிவித்தார்.