கனடாவின் வடக்கு மானிடோபாவில் –51 அளவில் கடும் குளிரான காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று வெப்பநிலை –46 முதல் –51 வரை செல்லக்கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்தக் காலநிலை பிற்பகல் வேளையில் குறைவடையகூடிய சத்தியம் உள்ளதாகவும் எதிர்வுகூறியது.
எனினும் எதிர்வரும் வாரங்களில் சாதாரண வெப்பநிலை தொடரும் என்றும் அத்திணைக்களம் கூறியுள்ளது.
இதன் காரணமாக மக்களை வீடுகளில் இருக்குமாறும் வெளியில் செல்வதை அதிகம் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அத்துடன், வாகனச் சாரதிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை எட்மன்டனின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளுக்கும் அல்பேர்ட்டா பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.