தமிழ், மலையாள படங்களில் பிரபல நடிகையாக இருந்தவர் பாவனா. அவரை காரில் கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தது ஒரு கும்பல். இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம், படப்பிடிப்பை முடித்துக் கொண்டு பாவனா திரும்பும் வழியில், கேரள மாநிலத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில், பிரபல நடிகர் திலீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை எர்ணாகுளம் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது.
தன்னை திரைத்துறையில் பாவனா எதிர்த்ததால், கூலிப்படையை வைத்து திலீப்பே இந்த கொடூரத்தை செய்ததை பொலிசார் விசாரணையில் கண்டறிந்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் நடிகை பாவனா மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி ராஜா விஜயராகவன், கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.
எர்ணாகுளத்தில் உள்ள சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு பெண் நீதிபதி ஹனி எம்.வர்கீஸ், இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.