Loading...
வவுனியா கல்கமுவ மக்கள் குடிமனைகளை அண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டு வந்தவர்களை விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.
ஈரட்டை பெரியகுளம், கல்கமுவ பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி , மண் அகழ்வு மேற்கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் கும்பல் ஒன்றைப்பற்றி கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (25) மாலை 4.30 மணியளவில் களமிறங்கிய மடுகந்தை விசேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் மனோஹரா அவர்களின் தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இச் சுற்றிவளைப்பின் மூலம் சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டமை தெரியவந்தது. டிப்பர் வாகனம் மற்றும் மண் அள்ளும் பைகோ வாகனத்தையும் கைப்பற்றினர். அத்துடன் ஈரட்டையை சேர்ந்த 23,32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களையும், கைப்பற்றபட்ட வாகனத்தையும் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிபடையினர் கையளித்தனர்.
Loading...