மாங்குளம் கொக்காவில் பகுதியில் கொழும்பிலிருந்து வந்த சொகுசு பேரூந்து மோதி பஸ்சின் சாரதி பலியாகியும் பயணிகள் சிலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுமுள்ளனர். இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயர் மாற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ஒன்றுடனேயே குறித்த பஸ் மோதியதாக தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.