கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய ராணுவ வீர்ர்கள் மீது மறைந்து இருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கி 12 வீர்ர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆகையால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை முதல் இந்தியா எல்லையில் அமைந்துள்ள தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய இராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தீவிரவாத முகாம் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லை ஓரம் அமைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி அழித்துள்ளனர்.இதில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசியது இந்தியா. மேலும், மிராஜ் வகை 2000 ஜெட் விமானங்கள் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்னர்.புல்வாமா தாக்குதல் நடந்த 12 நாட்கள் கழித்து இராணுவத்தினர் பதிலடி கொடுத்துள்ளனர்.
தீவிரவாதிகளின் முகாமை இந்திய விமானப்படை தகர்த்துள்ளதால் அங்கிருக்கும் தீவிரவாதிகளின் உயிரிழந்திக்ககூடும் என தெரிவிக்கப்படுகிறது.அதிகாலை 3.30 மணிக்கு இந்த அதிரடி தாக்குதலை இந்திய விமானப்படை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.