காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்றுக் (25) கிளிநொச்சியில் பாரிய கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரிட்டனில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பிரிட்டன் தலைமை அமைச்சர் அலுவலகம் முன்பாக பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரிட்டன் தமிழ் இளையோர் அமைப்பு என்பற்றின் ஏற்பாட்டில் நாடு கடந்த தமிழீழ அரசின் ஒத்துழைப்புடன் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களில் முக்கியமான எவற்றையும் இலங்கை அரசு செய்யவில்லை.
பல்லாண்டுகளாக விசாரணைகள் ஏதுமின்றிச் சிறைகளில் வதைபட்டுக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு, தமிழ் மக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்களில் இந்த அரசு அக்கறை காட்டவில்லை.
இலங்கைக்கு மீளக் கால நீடிப்பு வழங்காது, பன்னாட்டு நீதிமன்றுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.