அனைத்து மக்களும் பார்த்து பயப்படும் ஒரு கடவுள் என்றால் அது சனிபகவன்தான். ஏனெனில் சனிபகவானின் பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவர்கள் வாழ்கையில் அனுபவிக்கும் இன்னல்களுக்கு எல்லையே இருக்காது. சனிபகவான் நமக்கு அளிக்கும் தண்டனைகள் நமது பாவங்களுக்கான தணடனைகள் என்று புராணங்கள் கூறுகிறது. சனிபகவான் அளிக்கும் சோதனைகளை கடந்து விட்டால் அவர்கள் எல்லையில்லா ஆசீர்வாதங்களை அளிப்பார்.
சனிபகவானின் கோபப்பார்வை எப்பொழுதும் உங்கள் வாழ்க்கையில் சோதனைகளையும், தடைகளையும் உண்டாக்கும். உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கும். எந்த ராசிக்கு சனிபகவான் சென்றாலும் அதனால் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை வருமோ என்று பயப்படாதவர்களே இருக்க முடியாது.
இந்த சூழ்நிலையில் சனிபகவான் மற்ற ராசிகளில் இருந்தாலும் அவரின் பார்வை உங்கள் மீதும் இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இருக்கும்போது உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழும். இந்த பதிவில் உங்கள் மீது சனிப்பார்வை உள்ளது என்பதை உணர்த்தும் செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
காலனியை இழந்து விட்டீர்களா?
காலணி தொலைந்தால் கெட்ட நேரம் போய்விடும் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் உங்கள் காலணியை இழந்து விட்டாலோ அல்லது அடிக்கடி பழுதானாலோ உங்கள் மீது சனியின் கோபப்பார்வை இருக்கிறது என்று அர்த்தம்.
கடன், துரோகம் மற்றும் இழப்பு
உங்கள் நண்பரால் துரோகம் செய்யப்பட்டு உங்கள் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டாலோ, கடனோடு சேர்த்து செலவுகளும் அதிகரித்தால் உங்கள் வாழ்க்கையில் சனிபகவானின் கோபப்பார்வை உள்ளது என்று புரிந்து கொள்ளுங்கள்
கல்வியில் பிரச்சினை
நீங்கள் படித்து கொண்டிருப்பவர்களாக இருந்தால் உங்களுக்கு படிப்பில் கவனம் இல்லாமலோ அல்லது தொடர்ந்து தோல்வி அடைந்து எதிர்காலமே இல்லை போன்ற எண்ணங்கள் தோன்றினால் அது எதார்த்தமாக நடப்பது இல்லை. சனிபகவானால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகள் ஆகும்.
திருமண பிரச்சினைகள்
திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சனிபகவானின் கோபப்பார்வை விழுந்து விட்டால் அவர்களின் திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருக்கும். பல்வேறு வடிவங்களில் உங்கள் திருமணத்திலும், குடும்பத்திலும் சிக்கல்கள் எழும்.
தீமை மீதான ஈர்ப்பு
ஒருவரின் மீது சனிபகவானின் பார்வை விழுந்து விட்டால் அவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்கள் எதிர்மறை சக்திகளை நோக்கியே செல்லும். போதை பழக்கம் மற்றும் பிற சீர்கேடான செயல்களுக்கு அவர்கள் எளிதில் அடிமையாகி விடுவார்கள்.