எகிப்து விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள கனேடியரை விடுதலை செய்யுமாறு அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனேடியரான யாசர் அகமது அல்பாஸ் கடந்த திங்கட்கிழமை கெய்ரோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
பொறியாளரான இவர் கடந்த டிசம்பர் மாதம் முதல் எகிப்தில் தொழில் நிமித்தமாக தங்கியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை ஒன்றாரியோவிலுள்ள குடியிருப்பிற்கு திரும்பும் வகையில் கெய்ரோ விமான நிலையம் சென்றுள்ளார்.
இதன்போது யாசர் அகமதுவின் கடவுச்சீட்டினை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர், அவரது பெயர் சர்வதேச விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது என அவரிடம் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் தனது தந்தையை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை கடினேய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என யாசரின் மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.