நம் சமூகத்தைப் பொருத்தவரை, சுகப்பிரசவம் என்பது, கூடங்குளத்தில் மின்சாரம் தயாரிப்பதைப் போல, செயற்கரிய ஒரு செயல் ஆகிவிட்டது. “சுகப்பிரசவம் என்பது கருவுற்ற அனைவருக்குமானது அல்ல; அது ஆசீர்வதிக்கப்பட்ட வர்களுக்கே அமையும்.” நமது ஆங்கில மகப்பேறு மருத்துவமுறைகளும், மகப்பேறு மருத்துவர்களும் அப்படித்தான் நம்மை நம்ப வைத்திருக்கின்றனர்.
ஆங்கில மருத்துவ முறையின்படி, ஒரு பெண் கருவுற்றதற்கான அறிகுறிகளை உணர்ந்த வுடன் என்ன செய்ய வேண்டும்? மருந்து கடைகளில் விற்கும் சுய பரிசோதனைக் கருவியை வாங்கி சோதிக்க வேண்டும். இரண்டு சிவப்புக் கோடுகளை அது காட்டி விட்டால், கருவுற்றிருப்பது உறுதி. உடனடியாக ஒரு ‘கைராசியான’ மகப்பேறு மருத்து வரை அணுக வேண்டும். ஸ்கேனிங் என்ற பெயரில் சில நிமிட ரணகளத்திற்குப் பிறகு கருவுற்றிருப்பதை அதிகாரபூர்வமாக அவர் உறுதி செய்வார்.
அவ்வளவுதான். இனி அந்த கர்ப்பிணி அன்றாடம் எத்தனை மணிக்கு எழ வேண்டும்? எப்படி பல் துலக்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்? குனியலாமா, கூடாதா? வாந்தி வந்தால் என்ன மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்? மயக்கம் வந்தால் என்ன ஊசி போட வேண்டும்? இப்படி அனைத்தையும் இனி அந்த மருத்துவர்தான் முடிவு செய்வார். ஐந்து மாதங்கள் வரை, வாராவாரம் மருத்துவரைச் சந்தித்து ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இப்படியாக, முப்பது முப்பத்தி ரெண்டு வாரங்கள் கடந்துவிட்ட பிறகு, தேதி குறித்துக் கொடுப்பார் கள். தேதிக்கு முன்னதாகவே அந்த மருத்துவமனையில் சேர்ந்துவிட வேண்டும். குறிப்பிட்ட நாளில் பிரசவ வலி வருகிறதா என பார்ப்பார்கள்.வரவில்லை என்றால், வலி வருவ தற்கான ஊசியைப் போடு வார்கள். மாறாக, குறிப் பிட்ட தேதிக்கு முன்னதாகவே பிரசவ வலி வந்து விட்டால், வலி நிற்பதற்கான ஊசியைப் போடு வார்கள். இப்படி யாக, மருத்துவரின் அல்லது பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு தக்கபடி, குழந்தை பிறந்தாக வேண்டும். இல்லாவிட்டால், ‘சிசேரி யன்’ எனும் அறுவை சிகிச்சைப் பிரசவம் தான். ஆங்கில மருத்துவ உலகில், ‘கேன் ஸர்’ என்ற வார்த்தைக்கு அடுத்தபடியாக அதிகம் உச்சரிக்கப் பட்டது ‘சிசேரியன்’ எனும் வார்த்தையாகத்தான் இருக்கும்.
சிசேரியன் செய்வதற்கு முன்ன தாக, இந்த அறுவை சிகிச்சையால், தாய்க்கோ, குழந்தைக்கோ எது நேர்ந்தாலும், தொடர்புடைய மருத்துவரோ, மருத்துவ மனையோ, அல்லது வேறு யாருமோ காரணம் அல்லர் என கையொப்பம் வாங் கிக்கொள்வார்கள். அந்த அளவிற்கு தங்களது மருத்துவ முறையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை. இப்ப டிப்பட்ட சிசேரியனால், வாழ்க்கை முழுக்க தாயும், சேயும் அனுபவிக் கப்போகும் இன்னல்கள் குறித்த எந்த தகவலும் அந்த அறிக்கையில் இருக்காது.
இவை எல்லாவற்றையும் தாண்டி, ஆசீர்வதிக்கப்பட்ட கர்ப் பிணிக்கு மருத்துவமனையில் சுகப் பிரசவம் நடந்துவிட்டால், அது உலக அதிசயங்களில் ஒன்றாக கொண்டாடப்பட வேண்டியது. ஆக, அறுவை சிகிச்சை பிரசவமோ அல்லது சுகப்பிரசவமோ, மருத்து வச் செலவு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரை வந்துவிடும். இப்படியாக, மகப்பேறு என்பதே அபாயகரமான ஒன்றாக, சுகப்பிரசவம் என்பதே அரிதான ஒன்றாக, மருத்துவப் பரிசோத னைகள் என்பவை அத்தியாவசிய மான ஒன்றாக, ஆங்கில மருத்துவ முறை நம் புத்தியில் உறைய வைத் திருக்கிறது.
இவை அனைத்திற்கும் மாறாக, மகப்பேறு என்பதை ஓர் இனிய அனுபவமாக, நிச்சயத்தன்மையுடன் கூடிய சுகப்பிரசவத்தை சாத்தியப் படுத்துகிறது, இயற்கையோடு இயைந்த, மரபு வழி மருத்துவம். இந்த முறையில், ஊசியால் குத்து வது அரிது. நாடித் துடிப்பின் வாயி லாகவே நோயின் அல்லது தொந் தரவின் தன்மையை அறிந்து, உடம் பில் உள்ள குறிப்பிட்ட சில புள்ளி களில் தொடுவதன் மூலமாகவே குணப்படுத் தக்கூடியது இதுவே தொடு சிகிச்சை எனப்படுகிறது. ‘உணவே மருந்து; உடலே மருத்து வர்’ என்பதே இதன் அடிநாதம். தமிழகத்தில் தொடு சிகிச்சை மருத்துவத்தை திரு. ஏங்கெல்ஸ் ராஜா, திரு. போஸ் முகமது மீரான், திரு. மகி ராமலிங்கம், திரு. மாவீரன் போன்றவர்கள் தற்போது வெற்றி கரமாகச் செய்து வருகின்றனர்.
ஏற்கெனவே, இந்த தொடு சிகிச்சை முறையின் அடிப்படையை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையில், எங்களுக்கான மகப்பேறு மருத்துவத்தையும் தொடு சிகிச்சை முறையிலேயே பார்க் கலாம் என நானும் என் மனைவி சவிதாவும் முடிவு செய்தோம். அதன் படி, திரு. ஏங்கெல்ஸ் ராஜாவிடம் தொடர்ந்து தொடு சிகிச்சை எடுத்துக் கொண்டோம். ஃபோலிக் ஆசிட் உள்ளிட்ட எந்தவிதமான மருந்து, மாத்திரையையோ, ஊசியை யோ, ஸ்கேன் பரிசோதனையையோ எடுத்துக் கொள்ளவில்லை. தொடு சிகிச்சையாளரின் ஆலோசனைப் படி, அன்றாட உணவு முறையில் மட்டும் சில மாற்றங்களைச் செய்து கொண்டோம்.
பால், தயிர், தேநீர் போன்ற வற்றை முற்றிலும் தவிர்த்தோம். பழங்கள், மீன் உணவுகள் போன்ற வற்றைக் கூடுதலாக எடுத்துக் கொண்டோம். பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தோம். ஐந்து மாதங்கள் வரை ‘பொட்டு போல’ போய்விட்டு, ‘பொட்டு போல’ வரவேண்டும் என்கிற ஆங்கில மருத்துவ அச்சுறுத்தல் எதுவும் இல்லை. எப்போதும் போல, இயல் பாக நடக்கலாம். பேருந்துக ளில், ரயிலில் பயணம் செய்யலாம். ‘ஆசைப்பட்டால், கடற்கரைக்குச் சென்று குதிரைச் சவாரிகூட செய் யலாம்’ என்றார் ஏங்கெல்ஸ் ராஜா. இப்படியாக முதல் ஐந்து மாதங்கள் வெகு இயல்பாகக் கடந்தன.
எல்லாம் சரி. தொடு சிகிச்சை முறையில் மகப்பேறு மருத்துவம் பார்ப்பதற்கு எதிர்ப்பு வரவில் லையா? எதிர்ப்பு மட்டுமல்ல, பலர் நேரடியாகவே எதிர்மறையாகப் பேசி பயமுறுத்தவும் செய்தார்கள். குடும்பத்தினர் மட்டுமல்லாமல், நண்பர்கள் சிலர், அலுவலகத் தோழர்கள் என பலரும் பலவித மான கருத்துக்களைக் கூறி, ஆங்கில மருத்துவத்தின் பக்கம் போகச் சொன்னார்கள். “கருவிப் பரி சோதனை செய்யாமல் இருந்தால், தாய்க்கு சர்க்கரை நோய் வருவதைக் கண்டறிய முடியாது; குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கு வதை கவனிக்க இயலாது; குழந்தை ஊனத்துடன் பிறக்கும்” என்றெல் லாம் நேரடியாகவே பேசி அச்சு றுத்தினார்கள். இவை அனைத் திற்கும் என் மனைவி சொன்ன ஒரே பதில், “விலங்குகள் எவையும் மகப்பேறுக்காக மருத்துவமனைக் குச் செல்வதில்லை. இயல்பாகவே, இயற்கையின் விதிகளின்படியே கருவுற்று குட்டிகளை ஈனுகின்றன. அப்படி இருக்கையில் மனிதன் மட்டும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்; பரிசோதனை களைச் செய்ய வேண்டும் என்ப தெல்லாம் இயற்கைக்கு முரணா னது. நமது வாழ்க்கை முறையும், ஆங்கில மருத்துவ மோகமும் அத்த கைய நிர்பந்தத்தை நமக்கு ஏற்படுத் திவிட்டன. இயற்கையின் விதி களின் படியான பிரசவத்தை மரபு வழி மருத்துவம் கண்டிப்பாக சாத்தி யப்படுத்தும்”.
அந்த நாள் வந்தது. மனைவிக்கு பிரசவ வலி வந்துவிட்டது என சென்னையிலிருந்த எனக்குத் தகவல் வந்தது. மயிலாடுதுறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம்” என்று சொல்லி விட்டார் எங்கெல்ஸ். உதவிக்கு வேண்டுமானால், யாராவது செவி லியரை உடன் வைத்துக் கொள் ளுங்கள் என்றார் அவர். அதன்படி, ஈழத்தமிழரும், மயிலாடுதுறையில் பணிபுரியும் மரபுவழிச் செவிலியரு மான நளாயினி என்பவரை உடன் தங்க வைத்திருந்தோம்.
மனைவிக்கு பிரசவ வலி தொடங்கிய செய்தி அறிந்ததில் இருந்தே நான் பதற்றமாயிருந்தேன். இன்னும் சில மணி நேரங்களில் என் மகனையோ, மகளையோ பார்க்கப் போகிறேன் என்ற ஆசை ஒரு புறம்; இயற்கை முறை யிலான இந்தப் பிரசவம் சரியாக நடைபெற வேண்டுமே என்கிற எதிர்பார்ப்பு இன்னொருபுறம். இதில் ஏதாவது தவறு நடந்து, தாய்க்கோ, குழந் தைக்கோ சிக்கலாகிவிட்டால், உடனடியாக வேறு ஏற்பாடுகளின் படி காப்பாற்றிவிட முடியும் என்றா லும், அனைத்து தரப்பின் குற்றச் சாட்டுகளையும் சுமக்க வேண்டுமே; நாம் முன்னெடுக்கும் மாற்று முயற்சிகள் அனைத்துமே தோல் விக்குரியவை என்ற உதாரணத்தை அது ஏற்படுத்தி விடுமே என் றெல்லாம் மனக்குழப்பம் சூழ்ந்து கொண்டது.
நான் வீட்டிற்குச் சென்றபோது மாலை 6 மணி. பிரசவ வலியால் என் மனைவி அழுது கொண்டி ருந்தார். செவிலியர் நளாயினியிடம் தொலைபேசி மூலம் ஏங்கெல்ஸ் சில குறிப்புகளைச் சொல்லியி ருந்தார். “ஆங்கில மருத்துவ முறை யின்படியான எந்த முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது; குறிப்பாக, கர்ப்பப்பை வாசலைக் கிழித்து விடுவது, முதலில் தலை வருகிறதா, கால் வருகிறதா என தொட்டுப் பார்ப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது. குழந்தை தானாக பிறக்கும் வரை காத்திருக்க வேண்டும்” என்ப வையே அவை.
இரவெல்லாம் விழித்திருந்தோம். அரைமணி நேரத்திற்கு ஒரு முறை ஏங்கெல்ஸிடம் தொலை பேசியில் பேசியபடி இருந்தோம். வலியின் தன்மையை வைத்து, இப்போது தண்ணீர் குடிக்கலாம்; இப்போது சற்று தொலைவு நடக் கலாம் என்பது போன்ற குறிப்பு களை அவர் சொன்னபடி இருந் தார். இரவு சரியாக 12.40 மணிக்கு நீர்க்குடம் உடைந்தது. தொடர்ந்து ஏங்கெல்ஸிடம் பேசியபடி இருந் தோம்.
பொழுது விடிந்தது. காலை 5 மணி. தொடந்து பிரசவ வலி இருந் தது; ஆனால், குழந்தை மட்டும் வெளியில் வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள் கலவர முகத்துடன் அறைக்குள் எட்டி பார்த்தபடி இருந்தார்கள். செவிலியர் நளாயி னியும் பதற்றத்தில் இருந்தார். இப் போது ஏங்கெல்ஸிற் குப் பதிலாக, அவரது மனைவி பிரியா தொலை பேசி தொடர்பில் இருந்தார். மணி 6, 7, 8 என கடிகார முட்கள் நகர்ந்துகொண்டே இருந்தன.
சரியாக காலை 8.46 மணி. ரத்தமும், தண்ணீரும் கசிய, குழந்தை வெளியே வந்தது. மழையில் நனைந்து தலைதுவட்டாத புறா வைப் போலிருந்தது. “ஆண் குழந்தை பிறந்திருக்கு சார்” என்ற படி நளாயினி குழந்தையை என் கைகளில் கொடுத்தார். நடுங்கிய கைகளில் குழந்தையை வாங்கி முத்த மிட்டேன். என் மனைவி கண்ணீர் மல்க சிரித்துக் கொண்டிருந்தார்.
இப்போது ஏங்கெல்ஸ் தொடர் பில் வந்தார். “குழந்தை அழுகிறதா? அழாவிட்டால் அழவையுங்கள்” என்றவர், “15 நிமிடங்களுக்கு தொப் புள் கொடியை துண்டிக்கக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகு, குழந்தை யின் நெற்றியைத் தொடும் நீளத் திற்கு இடைவெளிவிட்டு துண்டிக்க வேண்டும்” என்றார்.
ஆங்கில மருத்துவ முறையில், குழந்தை பிறந்தவுடனேயே தொப் புள் கொடியை துண்டித்து விடு வார்கள். அதுவும் இரண்டு அல் லது மூன்று அங்குல அளவில் வைத்து துண்டிப்பார்கள். மரபு வழி மருத்துவத்தில் 15 நிமிடங்கள் வரை துண்டிக்காமல் வைத்திருப்பதன் மூலம் சில சத்துக்கள் குழந்தைக்குச் செல்வதை உறுதி செய்ய இயலும். மேலும், எவ்வளவு நீளம் விட்டு துண்டிக்கிறோமோ, அந்த அள விற்கு குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும் என்றும் சொல்லப் படுகிறது. ஏங்கெல்ஸ் சொன்னது போல, தொப்புள் கொடியை துண்டித்து நூல் கொண்டு முடிச் சிட்டு, கட்டிலில் கிடத்தினார்கள்.
மனமார்ந்த மகிழ்ச்சியுடன் மதியம் நேரில் வந்து குழந்தையைப் பார்த்தார் ஏங்கெல்ஸ். குழந்தை பெற்ற களைப்புகூட தெரியாத என் மனைவி, கூடத்திற்கு வந்து அவரை வரவேற்றார். ஏங்கெல்ஸிடம் “நீங்கள் முன்பே வந்திருந்தால், நாங்கள் இன்னும் தைரியமாக இருந்திருப்போம்” என்றேன். “எந்த வொரு ஆகச் சிறந்த மருத்து வருக் காகவும் குழந்தை காத்திருக்காது; அதேபோல, அவர் வந்தவுடன் குழந்தை பிறந்துவிடாது” என்றார்.
இப்படித்தான் குழந்தை பிறந்தது என்பதைச் சொல்லும் போது பலரும் அதிர்ச்சி அடைகி றார்கள். ஆச்சரியப் படுகிறார்கள். “நீங்கள் செய்திருப்பது மாபெரும் சாதனை” என்கிறார்கள். மருத்துவப் புரட்சி என்கிறார்கள். கடவுளின் கருணை என்கிறார்கள்.
இதில் ஆச்சரியப்படுவதற்கோ, என்னையோ, என் மனைவியையோ பாராட்டுவதற்கோ எதுவுமில்லை. காரணம், இதில் எங்களது சாதனை எதுவும் இல்லை. இது இயற்கையின் சாதனை. இயற்கையின் இயல்பு. இயற்கையின் வழியில் நடக்கும் எவருக்கும் இனிய சுகப்பிரசவம் சாத்தியமே!