இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி மர்மமான முறையில் துபாய் சென்ற இடத்தில் மரணமடைந்தார். இவரது இறப்பு இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது
ஸ்ரீதேவியின் முதலமாண்டு நினைவு நாள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்றது. மேலும் அவருக்கு திதி கொடுக்கும் சம்பவம் சென்னையில் கடந்த வாரம் நடந்தது. இதில் பல நடிகர் பிரபலங்களும் பங்கேற்றார்கள்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் நினைவு தினத்தையொட்டி அவரது புடவைகள் கணவர் போனி கபூரால் இணையம் மூலமாக ஏலத்தில் விடப்பட்டன. இதில் அவர் பயன்படுத்திய கோட்டா வகை புடவை மட்டும் சுமார் 1.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. இதன் ஆரம்ப விலை 40 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இந்த தொகைகளை தொண்டு நிறுவனத்திற்கு தர போனி கபூர் முடிவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.