இலங்கை பேஸ்புக் மூலம் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெவிநுவர பிரதேசததில் போலி பேஸ்புக் கணக்குகளை தயாரித்து பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொள்வதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக் மூலம் நட்புறவை ஏற்படுத்தி அவர்களுடன் சட்டரீதியான திருமணம் செய்த 4 பேர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவர்களில் ஒரு பெண் இது தொடர்பில் அறிந்து விவாகரத்து செய்து வேறு ஒருவரை திருமணம் செய்ய தயாராகி உள்ளார்.
இதன்போது புதிதாக திருமணம் செய்யும் நபரிடம் முன்னைய திருமண புகைப்படங்களை வெளிப்படுத்துவதாகவும் அதனை மறைக்க வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் கப்பமாக வழங்குமாறு குறித்த இளைஞன் கோரியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள செல்ல சென்ற போது, ஏனைய திருமணங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 4 திருமணத்திற்கு மேலதிகமாக நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் பல திருமணங்களை செய்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக பொலிஸார் சந்தேக்கின்றனர்.
அந்த இளைஞன் தனது அழகான தோற்றத்திலான புகைப்படங்களை பயன்பபடுத்தி பேஸ்புக் கணக்கில் பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.
பல திருமணத்தின் கீழ் அவருக்கு எதிராக தனியான விசாரணை ஒன்றை நடத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.