Loading...
சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் நாட்டில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்வதற்காக இவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.
இந்த குழுவினரை நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளனர்.
Loading...
இதன்போது கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தி அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
Loading...