அரச நிறைவேற்று அதிகாரிகள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையினால் அரச சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரச நிறைவேற்று அதிகாரிகளின் ஒன்றிணைந்த குழு இன்றைய தினம் ஒரு நாள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய சம்பள கொள்கைளை மீறி சட்ட அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு வெளியிட்டு பணி புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையினால் ஏனைய அரச நிறைவேற்று அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அந்த குழுவின் செயலாளர் எச்.எல்.ஏ உதயசிறி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இலங்கை அரச சேவையில் 15, 000 நிறைவேற்று அதிகாரிகள் உள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு இலங்கை நிர்வாக சேவை சங்கம், தேசிய வருமான தொழிற்சங்கள் உட்பட 15 தொழிற்சங்கள் ஆதரவு வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் மத்தும பண்டாரவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்தை தோல்வியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.