இந்திய போர் விமானமும், பாகிஸ்தான் போர் விமானமும் காஷ்மீர் எல்லையில் துரத்தி துரத்தி சண்டையில் ஈடுப்பட்டு இருக்கிறார்கள். இந்தியா – பாகிஸ்தான் இடையே கடுமையான வான் சண்டை நடந்து வருகிறது. புல்வாமா தாக்குதலை அடுத்து நிலவி வந்த கடுமையான பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது. நேற்று காலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய போர் விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் 4 அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் எப் -16 போர் விமானங்கள் நுழைந்து இருக்கிறது. 2-3 விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து இருக்கிறது. அதேபோல் காஷ்மீரின் ராஜூரி பகுதியில் அவர்கள் குண்டுகளை எரிந்து இருக்கிறார்கள்.
இந்த தாக்குதலை அடுத்து அந்த பகுதிக்கு வேகமாக இந்திய போர் விமானங்கள், வான் கட்டுப்பாட்டு பாதுகாப்பு விமானங்கள் விரைந்து இருக்கிறது. வேகமாக பாகிஸ்தான் விமானங்களை இந்தியா விமானங்கள் சுற்றி வளைத்து உள்ளது. அந்த மூன்று விமானங்களை இந்தியாவின் போர் விமானங்கள் சுற்றி வளைத்து உள்ளது.
இந்த நிலையில் இன்று வானத்தில் இந்திய பாகிஸ்தான் விமானங்கள் இடையே டாக்- ஃபைட் நடந்து இருக்கிறது. டாக்- ஃபைட் என்பது ஒரு நாட்டின் போர் விமானங்களை இன்னொரு நாட்டின் போர் விமானங்கள் துரத்தி செல்லும் நிகழ்வு ஆகும். எல்லை மாறி விமானங்கள் செல்லும் போது இது போன்ற டாக்- ஃபைட் நடக்கும்.
இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானங்களை இந்தியா போர் விமானங்கள் அப்படித்தான் துரத்திக் கொண்டு சென்று இருக்கிறது. இதில்தான் பாகிஸ்தானின் எப்-16 விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. விமானங்கள் துரத்தி துரத்தி சண்டையிட்டதை அப்பகுதி மக்களால் பார்த்ததாக தெரிவித்து இருக்கிறார்கள்.