Loading...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிலிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (27) காலையில் மீட்கப்பட்டுள்ளது.
தாளங்குட கடற்கரை பகுதியை அண்டிய வேடர்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் சடலம் மீட்கப்பட்டது. சடலம் முற்றாக எரிந்த நிலையில் மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு என்பனவே மீட்கப்பட்டது.
60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலமாக இருக்கலாமென பொலிசார் தெரிவித்தனர். எனினும், சடலத்திற்குரியவர் அடையாளம் காணப்படவில்லை.
Loading...
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...