தான் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து ராய் லட்சுமி விளக்கம் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ராய் லட்சுமி. அவர் எவ்வளவு பிசியாக இருந்தாலும் ட்விட்டரில் ரசிகர்களுடன் டச்சில் உள்ளார். இந்த காரணத்தினாலேயே அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
ராய் லட்சுமி திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து அறிந்த ராய் லட்சுமி கோபம் அடைந்துள்ளார். என்னை பற்றி வதந்தி பரப்புவதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர் என்கிறார் அவர்.
என் வாழ்வில் பல காதல் வந்து போயுள்ளது. ஆனால் அதற்காக உங்களுக்கு இஷ்டப்படி எல்லாம் என்னை பற்றி பேசக் கூடாது. நான் மாங்காய் சாப்பிட்டதை பார்த்து தான் இந்த வதந்தியை பரப்பியுள்ளனர். இது போன்ற வதந்தியை பரப்புவதை நிறுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார் ராய் லட்சுமி.
அவர் உண்டு, படங்கள் உண்டு என்று இருக்கும் ராய் லட்சுமியை ஏன் வம்புக்கு இழுக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் குமுறியுள்ளனர். இந்த வதந்தி குறித்து விசாரிக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
Don’t judge anyone based on what u heard. ??
#Jhansi #goodmorning luvlies ? pic.twitter.com/5uCsyZmmNP— RAAI LAXMI (@iamlakshmirai) February 27, 2019
கர்ப்ப வதந்தி பரவிய நிலையில் இன்று காலை இப்படி ஒரு ட்வீட் போட்டுள்ளார் ராய் லட்சுமி.