Loading...
பிரெனிஸ் இன்டர்நேஷனல் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `திருமணம்’.
இந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார் சேரன். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இன்னொரு நாயகனாகவும், நாயகியாக காவ்யா சுரேசும் நடித்துள்ளனர். தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சுகன்யா, சீமா ஜி. நாயர், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ராஜேஷ் யாதவ், இசை – சித்தார்த் விபின், படத்தொகுப்பு – பொன்னுவேல் தாமோதரன், பாடல்கள் – சேரன், லலித் ஆனந், யுகபாரதி, நடனம் – சஜ்னா நஜம், ஆடை வடிவமைப்பு – கவிதா சச்சி, தயாரிப்பு – பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சேரன்.
சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு படம் இயக்கியிருக்கும் சேரன் படம் பற்றி பேசும் போது,
திருமணம் படத்தை 4 வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கிறேன். இந்த இடைவெளியில் நிறைய அனுபவங்களை பெற்று விட்டேன். இந்த அனுபவங்கள் என்னை 10 வருடங்களுக்கு வழிநடத்தும் என்று நம்புகிறேன். ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி திருமணம் நடப்பது வரையிலான சம்பவங்களே படத்தின் கதை. இவ்வாறு கூறினார்.
படம் வருகிற மார்ச் 1-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
Loading...
Loading...