அஜித்தின் விஸ்வாசம் படம் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியான ஒரு பெரிய படம். விவேகம் படத்தில் படு ஸ்டைலாக நடித்திருந்த அஜித் இப்படத்தில் அப்படியே கிராமத்து ஸ்டைலில் இறங்கிவிட்டார். முறுக்கு மீசை, வேஷ்டி-சட்டை என அவரது லுக் அட்டகாசமாக படத்திற்கு அமைய ரசிகர்களும் கொண்டாடினார்கள். இப்படம் வெளியான முதலில் இருந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. இன்று இப்படம் வெளியாகி 50வது நாள் ஆகிவிட்டது.
இதற்கான கொண்டாட்டங்களை ரசிகர்கள் எப்போதோ ஆரம்பித்துவிட்டனர். தற்போது என்ன ஸ்பெஷல் என்றால் 50வது நாளிலும் இப்படம் தமிழ்நாட்டில் 125 திரையரங்குகளில் ஓடுகிறதாம். இதை தாண்டி பெங்களூர், இலங்கை, கனடா போன்ற இடங்களிலும் படம் அமோகமாக திரையிடப்படுகிறது. தோடு பிரான்சில் கூட 50வது நாள் கொண்டாட்டம் ரசிகர்களால் நடத்தப்படுகிறதாம்.