தமிழகத்தை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன் வரதாமன் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியிருந்த நிலையில் அவரின் குடும்பம் பற்றிய தகவல்களும் மீடியாவில் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் இது பற்றி பேசியுள்ள நடிகை கஸ்தூரி “அவர் ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்தவர்” என ட்விட்டரில் பேசியுள்ளார்.
இந்த சமயத்தில் ஜாதி பற்றி பேசுவதா என பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, உடனே அவர் மற்றொரு ட்விட்டையும் பதிவிட்டுள்ளார்.
” ராணுவத்தில் ரத்தம் சிந்தியவன் யாரும் ப்ராஹ்மணன் இல்லை என்று கணக்கெடுக்கும் நன்றிகெட்ட திராவிட சொம்புக்களுக்கு என் பதிவு கசக்கத்தான் செய்யும்” என கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.
#WingCommanderAbhinandan Chennai lad, comes from decorated airforce family. அபிநந்தன், சென்னையின் மகன். திருபணமூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆச்சாரமான குடும்பத்தில் தந்தையும் பரம் விஷிஸ்ட சேவா மெடல் வாங்கிய விமானப்படை வீரர். pic.twitter.com/lfzaBzMVUc
— Kasturi Shankar (@KasthuriShankar) February 27, 2019
சீருடையில் ஆச்சாரமா..? அந்த உயர்சாதி மனசு மானுடமாக மறுக்கிறதே..?
— Sundar Vasudevan (@sundarvee) February 27, 2019