Loading...
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாக்.,கில் உள்ள இந்திய தூதர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தி உள்ளார்.
Loading...
அபிநந்தனை ஒப்படைக்குமாறு நேற்று இந்தியாவிலுள்ள பாக்., துணை தூதரை அழைத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ள நிலையில், பாக்.,கிற்கான இந்திய தூதரும் இன்று வலியுறுத்தி உள்ளார். அபிநந்தனை பத்திரமாக மீட்க தூதரக ரீதியான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். அபிநந்தனை எந்த வகையிலும் துன்புறுத்தாமல் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என இந்திய தூதர், பாக்., வெளியுறவுத்துறை செயலர் அலுவலகத்திற்கு நேரில் சென்று வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Loading...