Loading...
காணாமல் போனவர்களிற்கு நீதி கோரி மன்னார் நகரில் இன்று ஆர்ப்பாட்ட போராட்டம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மன்னார் தள்காலிய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்த போராட்டம், பிரதான வீதி வழியாக சதொச வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழி இடத்தை அடைந்தது. அங்கு சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் மன்னார் மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.
மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ஐ.நா செயலாளருக்கான மகஜர் ஒன்றை அருட்தந்தையர்களிடம் கையளித்தனர். அருட்தந்தை செபஸ்ரியன் குரூஸ் உள்ளிட்ட அருட்தந்தையகர்கள் மகஜரை பெற்றுக்கொண்டனர்.
Loading...
Loading...