Loading...
வனரோபாய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட கட்டுரை போட்டியில் தேசிய ரீதியில் சாதனை படைத்த, வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் செல்வி க.ஜேனுஜா மற்றும் அதே போட்டியில் வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தை தனதாக்கிய செல்வன் க.கவிராஷ் ஆகிய மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலய பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டி நிகழ்வுகள் பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் இந்த மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
மாணவி க.ஜேனுஜா வவுணதீவு கிராமத்தை சேர்ந்தவர்.
Loading...
Loading...