மச்ச சாஸ்திரம்
சாஸ்திரங்கள் என்பது என்னவென்றால், வழிமுறைகள் என்று பொருள். எந்த விஷயங்கள் எப்படி நடக்கின்றன. நாம் எப்படி நடக்க வேண்டும் என்றவழிமுறைகளைப் பற்றி பேசுவது தான் சாஸ்திரம். அதேபோல தான் மச்ச சாஸ்திரமும். நம்முடைய உடலில் எந்த இடத்தில் எப்படிப்பட்ட மச்சம் இருக்கிறது. எந்த அளவில் இருக்கிறது, எந்த நிறத்தில் இருக்கிறது என்பதை வைத்து அதற்குரிய குணாதிசயங்கள் மற்றும் பலன்கள் பற்றி மச்ச சாஸ்திரம் மிக விரிவாகப் பேசுகிறது.
ஆண் – பெண் வேறுபாடு
பொதுவாக மச்சத்திற்கு சில பலன்கள் உண்டு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மச்சத்துக்கும் ஆண் பெண் வேறுபாடு உண்டு. ஒரே இடத்தில் உள்ள மச்சத்திற்கான பலன்கள் ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் இருக்கிறது. உதாரணமாக உதட்டுக்கு அருகில் ஒரு மச்சம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், அது ஆண்களுக்கு இருந்தால் அதற்கான பலன்கள் வேறாகவும் பெண்களுக்கு இருந்தால் அதற்கான பலன்கள் வேறாகவும் இருக்கும்.
அந்தரங்கப் பகுதி மச்சங்கள்
அந்தரங்கப் பகுதி மச்சங்கள் என்பது மார்புப் பகுதி, பிறப்புறுப்பு மற்றும் தொடைப்பகுதி மச்சங்களைக் குறிப்பிடலாம். அதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன மாதிரியான பலன்கள் வேறுபடுகின்றன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
முதுகு
தங்களால் பார்க்க முடியாத அளவுக்கு முதுகில் பெண்களுக்கு மச்சம் இருந்தால், அந்த பெண்கள் மிகவும் துணிச்சல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கை வாழ்வார்கள்.
இதுவே ஆண்களுக்கு முதுகுப் பகுதியில் மச்சம் இருந்தால், அதிர்ஷ்டசாலிகளாகம் பக்தியில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதேபோல் முதுகில் வலது பக்கம் மச்சம் இருந்தால், பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தொடையில் மச்சம்
பெண்களுக்கு இடது தொடையில் மச்சம் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கஷ்டப்பட்டு, வாழ்க்கையில் உன்னத நிலைக்கு உயர்ந்து செல்வார்கள். அதுவே வலது தொடையில் மச்சம் இருந்தால் அவர்கள் திமிர் பிடித்தவர்களாகவும் அடங்காபிடாரித் தனமாகவும் இருக்கும்.
ஆண்களுக்குத் தொடையில் மச்சம் இருந்தால், வசதியான வாழ்க்கை வாழக்கூடியவர்குளாக இருப்பார்கள். தொடையின் கீழ்ப்பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் கொஞ்சம் பலவீனமானவர்களாக இருப்பார்கள்.
மார்பில் மச்சம்
பெண்களுடைய இடது மார்பகத்தில் மச்சம் இருந்தால், வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவார்கள். சிறந்த வாழ்க்கைத் துணை கிடைக்கும். வலது பக்கம் மார்பகத்தில் மச்சம் இருந்தால் அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் ஒரே போராட்டமாகவே இருக்கும்.
ஆண்களுக்கு இடது மார்பில் மச்சம் இருந்தால் பெண்களிடம் மிகவும் பாசமாகப் பழகுவார்கள். நிறைய ஆண் குழந்தைகள் பிறக்கும்.
இதுவே வலது மார்பில் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருந்தாலும் கூட, மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் குணம் கொண்டிருப்பார்கள்.
தொப்புளில் மச்சம்
ஆண்களுக்கு தொப்புளில் மச்சம் இருந்தால் அவர்கள் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.
இதுவே பெண்களுக்கு தொப்புளின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால், அவர்கள் அமைதியும் இன்பமும் உண்டாகும். அடுத்தவர்களால் எப்போதும் பாராட்டப்படுவார்கள்.
பொதுவாக ஆண்களைப் போலவே பெண்களும் தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை வாழ்வார்கள்.
இதுவே தொப்புளுக்குக் கீழ் மச்சம் இருந்தால் செல்வமும் வறுமையும் மாறிமாறி வரும்.
பெண்ணின் பிறப்புறுப்பு
பெண்ணின் பிறப்புறுப்பில் மச்சம் உள்ளவர்கள் பேரதிஷ்டசாலிகளாக இருப்பார்கள். தன்னுடைய வாழ்க்கையைத் துணையை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பார்கள்.
நினைத்ததை சாதிக்கும் துடிப்பும் பிடிவாதமும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆணுறுப்பில் உள்ள மச்சம்
ஆணுறுப்பில் மச்சம் இருக்கும் ஆண்களுக்கு வாழ்க்கை எப்படி அமையும். இவர்கள் என்ன செலவு செய்தாலும் அதற்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும்.
கலை ஞானமும் ரசனையும் அதிகமாகக் கொண்டவர்களாக இருப்பார்கள்.