பாரவூர்தியிலிருந்து(லொறி) இரும்புப் பொருட்களை இறக்கிய போது திடீரென பாரவூர்தியின் கதவு உடைந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
யாழ். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(27) இடம்பெற்றுள்ளது.
யாழ்.உடுவில் பகுதியிலுள்ள இரும்புக் கடையொன்றில் வேலை செய்து வரும் குறித்த இளைஞன் மேற்படி இரும்புக் கடைக்குப் பாரவூர்தியில் வந்த இரும்புப் பொருட்களை இறக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது பாரவூர்தியின் கதவு திடீரென உடைந்து அவர் தலை மீது விழுந்துள்ளது.
உடனடியாக குறித்த இளைஞன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
இதேவேளை,யாழ்.கோண்டாவில் மேற்கு பாடசாலை வீதியைச் சேர்ந்த தேவராசா சாரூஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.