மாரி படத்தில் நடித்த கல்லூரி வினோத்திற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அது காதல் திருமணம் என்று கூறி தன் வருங்கால மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
கடந்த 2007ஆம் ஆண்டு தமன்னா நடிப்பில் வெளியான கல்லூரி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் வினோத் இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்று அவர் அடித்த காமெடி அனைவரையும் கவர்ந்தது. அதனாலே அவருக்கு கல்லூரி வினோத் என்ற பட்டபெயரும் கிடைத்தது.
பிறகு நீண்ட இடைவெளி விட்டு சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு படத்தில் நடித்திருந்தார். அதற்கடுத்து விழா, சுண்டாட்டம், மாரி , போன்ற மெகாஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டார். மாரி படத்தில் ரோபோ ஷங்கருடன் சேர்ந்து அவர் நடித்த காமெடி அடிதாங்கி கதாபாத்திரத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். மாரி படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகிறார்.
காதலியுடன் புகைப்படம்
இந்த நிலையில் இவர் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் காதல் திருமணமாம். இதை உண்மைப்படுத்தும் விதமாக வினோத் தன் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். ஆனால் தற்போது அந்த பதிவை வினோத் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது