பல சர்ச்சைகளுக்கும் மத்தியில் உலகளவில் ட்ரெண்ட் ஆகி வரும் சமூக வீடியோ அப்பிளிக்கேஷன் ஆகு டிக் டாக் விளங்கி வருகின்றது.
இந்த அப்பிளிக்கேஷனிற்கு தடை விதிக்க வேண்டும் என சில நாடுகளில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பல மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் ரகசியத் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி இந்த அப்பிளிக்கேஷன் திரட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி Federal Trade Commission அமைப்பு 5.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன முன்னர் Musical.ly எனும் பெயரில் வெளியிடப்பட்டு பட்டிதொட்டியெங்கும் பிரபல்யமடைந்திருந்தது.
iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் இந்த அப்பிளிக்கேஷன் இதுவரை ஒரு பில்லியனிற்கும் அதிகமாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.