பத்தரமுல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கல்வி அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியவர்கள் மீது ஏற்கனவே பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
ஆனால், அதனை பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டம் தொடர்ந்த நிலையில் பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் கல்வி அமைச்சின் முன்னால் இன்று ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
22 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி சேவையில் காணப்படும் சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரியும், 30 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.