கனடாவின் சில பகுதிகளில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
London, Lambton, Middlesex, Elgin, Oxford counties ஆகிய பகுதியில் நேற்று(புதன்கிழமை) மாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது.
இந்த பகுதிகளிலுள்ள வீதிகளில் 10 சென்றிமீற்றர் அளவில் குவிந்துள்ள பனிப்படலம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், பனிப்பொழிவுடன் கூடிய பனிமூட்டம் காரணமாக வாகனத்தின் முன் விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணிக்குமாறு பொலிஸார் வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்காரணமாக விபத்துக்களை குறைக்க முடியும் எனவும் பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கனடாவின் சில பகுதிகளில் இன்றைய தினமும் கடும் பனிப்பொழிவு நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கனேடிய சுற்றுசூழல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.