Loading...
வாழைச்சேனை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் அரியவகை மீனினமொன்று பிடிபட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மீராவோடை பகுதியிலிருந்து மீன்பிடிப்பதற்காக மீனவர் ஆழ்கடலுக்கு நேற்று முன்தினம் (27) சென்றுள்ளார். அவருடைய வலையில் அரியவகை மீனினமொன்று சிக்கியுள்ளது.
மிக நீண்ட காலமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் நான் இவ்வாறான மீனினத்தை கண்டதில்லை என குறித்த மீனவர் தெரிவித்துள்ளார்.
Loading...
மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள மீனவரின் வீட்டில் வைக்கப்பட்ட குறித்த மீனினத்தைப் பார்ப்பதற்கு அப்பிரதேச மக்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...