இல்லங்களில் செய்யப்படும் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் புளி சாதம் செய்யும் போது சாதத்தில் நல்லெண்ணையை ஊற்றி கிளறி வந்தால், சாதமானது உதிரியாக இருக்கும்
வீடுகளில் தோசை சுடும் சமயத்தில் தோசை மொறுமொறுப்புடன் இருக்க வேண்டும் என்று பலர் ஆசைப்படுவது வழக்கம். அவ்வாறு தோசை மொறுமொறுப்புடன் இருப்பதற்கு தோசை மாவிற்கு ஊறவைக்கும் அரிசியுடன் ஜவ்வரிசியை சேர்த்து ஊற வைத்து ஆட்டி தோசை சுட்டு வந்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
பூரி செய்யும் நேரத்தில் பலர் பூரி என்ன மண் போன்று இருக்கிறது? டேஸ்டாக உனக்கு செய்ய தெரியாத என்று தனது மனைவியிடமோ அல்லது கணவரிடமோ தகராறு செய்வது வழக்கம். அந்த வகையில், பூரி மாவில் தண்ணீருக்கு பதிலாக பாலை சேர்த்து பிசைந்து ஊறவைத்து பூரியை பொரித்தெடுத்து வந்தால் பூரியானது சுவையாக இருக்கும்.
பெரும்பாலான இல்லங்களில் தவறாது சமைக்கப்படும் பாகற்காய் சில நேரங்களில் அதிகளவு கசப்புடன் இருப்பதாக உணர்வோம். அந்த வகையில் பாகற்காயின் கசப்பு தன்மையை குறைப்பதற்காக உப்பு, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாற்றில் பாகற்காயை சுமார் 30 நிமிடம் ஊறவைத்த பின்னர் சமைத்தால் பாகற்காயில் இருக்கும் கசப்பானது தெரியாது.
வீடுகளில் வடை செய்யும் போது அதிகளவில் எண்ணையை வடைகள் உறிந்துகொள்ளாமல் இருப்பதற்கு, முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து வடை செய்ய தயார் செய்து வைத்துள்ள கலவையுடன், உருளைக்கிழங்கை சேர்த்து பிசைந்து வடையை பொரித்தெடுத்தால், எண்ணையை அதிகளவில் குடிக்காது.
தினமும் இல்லங்களில் அன்றாடம் காலை மற்றும் மாலை வேலைகளில் காய்ச்சப்படும் பால் புளிக்காமல் இருப்பதற்கு சிறிதளவு ஏலக்காயை சேர்த்து சாப்பிட்டு வர பால் விரைவில் புளிக்காது