சிந்து துலானி 1983ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர். தன் கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் செய்து வந்தார் சிந்து. தனது 16 வயதில் இருந்து பல ஆண்டுகளாக ஃபேர்&லவ்லி விளம்பரத்தின் மாடலாக இருந்தார் சிந்து.
இதன்காரணமாக தனது 17 வயதில் மொஹபட்டேன் என்ற ஹிந்தி படத்திலும் 20 வயதில் அய்த்தி என்ற தெலுங்கு படத்திலும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த இரண்டு படங்களுக்கு பிறகு சிந்துவிற்கு தொட்டதெல்லாம் துலங்கியது. அடுத்தடுத்து பல தெலுங்கு படங்களில் நடித்தார் சிந்து துலானி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் 30க்கும் மேற்ப்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் சிந்து துலானி.
தமிழில் மன்மதன், சுள்ளான், அலையடிக்குது, மஜா, பசுபதி கேர் ஆப் ராசக்கப்பாளையம், பந்தயம் என கடைசியாக 2012ஆம் ஆண்டு முரட்டு காலை என்ற தமிழ் படங்களில் நடித்தார் சிந்து.
தன்னுடன் நடித்த சுரேந்தர் ரெட்டி என்ற நடிகருடன் பல ஆண்டுகள் காதலில் இருந்தார். இவர்கள் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்ததாகவும், இவர்களுக்கு குழந்தைகள் உள்ளதாகவும் பேசப்படுகிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இது குறித்து இருவரும் இது எங்களது பர்சனல் மேட்டர் என கூறினர். தனது காதலனை பிரிந்து பின்னர் மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி உள்ளார் சிந்து. தற்போது தெலுங்கில் சித்ராங்கடா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிந்து.