தமிழ்நாட்டை சேர்ந்த மாவீரர் அபிநந்தனால் அனைத்து இந்தியரும் பெருமைப்படுவதாக கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள ஐ.சி.எப். இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த ரெயில் மூலம் மதுரையில் இருந்து சென்னை நகருக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றடைய முடையும். இந்த ரெயில் சேவை ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் வெற்றிக்கான மிகப்பெரிய அடையாளம் என்று மோடி குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, பிரதமரின் விவசாயிகள் நலத்திட்டத்தின்கீழ் முதல் தவணையான இரண்டாயிரம் ரூபாய் இதுவரை ஒரு கோடியே பத்து லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் பெண் ராணுவ மந்திரியாக பதவி வகிப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதில் நான் பெருமைப்படுகிறேன். இதேபோல், அனைத்து இந்தியர்களும் விமானப்படையை சேர்ந்த மாவீரர் அபிநந்தன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அனைத்து இந்தியரும் பெருமைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.