காதல் என்பது அழகானது. ஒருவரின் இன்பம் மற்றும் துன்பத்தை பகிர்ந்து கொள்ள இன்னொருவர் தேவை என்பதை உணர்த்துவது காதல். காதல் ஆழமானது. காதலில் மிகவும் முக்கிய அம்சம் நம்பிக்கை. ஒருவர் மீது மற்றொருவர் அதிக நம்பிக்கையுடன் இருத்தல் அவசியம். அதே சமயம் அந்த நம்பிக்கைக்கு ஏற்ற விதத்தில் இருவரும் நடப்பது அதை விட மிகவும் முக்கியம்.
இந்த நம்பிக்கை என்பது காதலில் மட்டும் அல்ல எல்லா உறவுகளிலும் அதிகம் தேவைப்படும் ஒரு அம்சமாக உள்ளது. இந்த நம்பிக்கையைக் குலைக்கும் விதத்தில் கணவனோ மனைவியோ நடந்து கொள்ளவதால் மற்றொருவருக்கு தீராத மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் வாழ்வில் அமைதியின்றி துயரக் கடலில் மிதக்கத் தொடங்குகின்றனர்.
கள்ளத்தொடர்பு
“நான் இன்னொரு நபருடன் தொடர்பில் இருக்கிறேன்” என்று யாருமே தன் துணையிடம் சொல்வதில்லை. ஆனால் பெண்கள் சாமர்த்தியசாலிகள். ஒரு ஆண் தன் நேர்மையான வழியில் இருந்து விலகி நடக்கும்போது, அவன் விட்டுச் செல்லும் சுவடை ஆராய்ந்து அவனின் தீய தொடர்பை புரிந்து கொள்வாள் பெண். ஆகவே ஆண்கள் தடம் மாறிச் செல்வதை அறிந்து கொள்வதற்கான மேலும் சில வழிகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். இவற்றைப் படித்து, பெண்கள் தங்கள் வாழ்க்கைத்துணை மற்றொரு பெண்ணிடம் தொடர்பில் இருப்பதை கண்டறியலாம். மனைவியை ஏமாற்றும் கணவர்களின் பொது வித்தைகளைப் பற்றி இங்கே இப்போது பார்க்கலாம். தொடர்ந்து படியுங்கள்.
10 அறிகுறிகள்
உறவுகள் தனித்தன்மை பெற்றவை. குறிப்பாக ஒவ்வொரு கணவன் மனைவி உறவும் வெவ்வேறு தன்மை கொண்டிருக்கும். உங்கள் கணவரின் பல அறிகுறிகள் அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதை உறுதி செய்தாலும், அவர் உங்களிடம் நாணயமானவராகவே நடந்து கொள்ள முயற்சிப்பார். ஆனால் அது உண்மையில்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். இவை அனைத்தயும் உங்கள் கணவன் வெளிபடுத்தினாலும், ஸ்திரமான ஆதாரம் கிடைக்கும் வரை பொறுத்திருந்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.
தோற்றத்திற்கு முக்கியத்துவம்
எப்போதும் உங்கள் கணவர் அவரின் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம். திடீரென்று சில நாட்களாக மிகவும் அழகான உடையில் தோன்றினால் சற்று எச்சரிக்கை அவசியம். இதுவே உங்கள் கணவருக்கு வேறொரு தொடர்பு உள்ளது என்பதற்கான முதல் அறிகுறியாகும்.
உங்கள் கணவர், அழகான உடை அணிந்து கொள்ளவும், தனது தலை முடியில் வேறு ஸ்டைல் மாற்றிக் கொள்ளவும் மிகவும் ஆவலாக இருப்பார். நிறைய புதிய ஆடைகள் வாங்குவதும், எந்த நேரமும் கண்ணாடி முன் நிற்பதும் அவரின் புதிய பழக்கமாக இருக்கலாம்.
திடீரென்று உடல் ஆரோக்கியத்தின் மேல் அதிக கவனம் செலுத்தலாம். நீங்கள் அவர் உடற் பயிற்சி செய்து பார்த்திருக்காத இத்தனை ஆண்டுகளில், இப்போது, நீண்ட நேரம் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமான பயிற்சிகளை மேற்கொள்வதை பார்த்து நீங்கள் வியக்கலாம்.
வேலைக்கு செல்லும்போது உங்கள் கணவர் எப்போதும் இல்லாமல், இப்போது மிகவும் சிறப்பாக உடையணிந்து சென்றால், அவருடைய பணியிடத்தில் சக பணியாளரை கவரும் நோக்கமாக இருக்கலாம். அல்லது, நீண்ட நேரம் ஜிம்மில் பயிற்சி செய்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ளும் ஆர்வம் தோன்றினால், அவருடைய புதிய தொடர்பு, அவரை இன்னும் சிறப்பான வடிவத்தில் இருக்க வைக்கிறது என்பதை நீங்கள் உணரலாம். அல்லது ஜிம்மில் கூட அவருக்கு நெருக்கமாக யாரவது இருக்கலாம்.
உங்கள் கணவர் அவருடைய தோற்றத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதை நீங்கள் உணரலாம். இதுவரை அவர் முயற்சிக்காத ஹேர் ஸ்டைல், அல்லது ஹேர் கலர் போன்றவற்றை முயற்சிக்கலாம். முகத்தின் மீசை அல்லது தாடியை ட்ரிம் செய்யலாம் அல்லது முற்றிலும் களைந்து கிளீன் ஷேவ் தோற்றத்தில் இருக்கலாம். புதிய வாசனை திரவியத்தை பயன்படுத்தத் தொடங்கலாம் .
அதிக உணர்ச்சி வசப்படுவது
உங்கள் கணவர் உங்களிடம் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு கோபம் கொள்வது அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதை வெளிபடுத்தும் அறிகுறியாகும். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களிடம் அவரின் நேரத்தையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ள முடியாமல் உங்களிடம் அவர் கோபம் கொள்ள நேரலாம். இதற்கு முன்னால் அவர் உங்களிடம் காட்டிய நெருக்கம் இப்போது குறைந்தது போல் உங்களுக்கு தோன்றலாம். அந்த நெருக்கத்தை அவர் தற்போது வேறொரு பெண்ணிடம் காட்டலாம்.
உங்கள் கணவர் உங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதை பற்றி ஒரு குற்ற உணர்வோடு இருக்கலாம். அதனால் உங்களிடம் அதிக ஈடுப்பாட்டை காட்டாமல் சற்று விலகி இருக்க நினைக்கலாம்.
உங்களுடன் ஒரு நெருக்கமான உணர்வை தவிர்க்க மற்றொரு காரணம் உண்டு. உங்களுடன் உங்கள் கணவர் நெருக்கமாக இருந்தால் அவரிடம் நீங்கள் எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்வீர்கள். அதே போல் அவரும் சொல்ல வாய்ப்புகள் வரலாம். இதனால் அவரின் ரகசியம் வெளியில் தெரியும். ஆகவே உணர்வு பூர்வமாக ஒரு நெருக்கம் இல்லாமல் இருந்தால் அவரால் உங்களை எளிதில் ஏமாற்றி பொய் சொல்ல முடியும் என்பதும் ஒரு முக்கிய காரணம்.
குணநலத்தில் மாற்றம்
உங்கள் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தால், மன அழுத்தம் உண்டாகி அவர் உங்களிடம் அதிகம் கோபப்படலாம்.
இரண்டு உறவையும் சம நிலையில் வைக்க முடியாத காரணத்தால் நீங்கள் அவருடன் சண்டையிடும் சூழ்நிலையை உண்டாக்கி, அவர் வாழ்வில் நடந்த எல்லாவற்றிற்கும் நீங்கள் தான் காரணம் என்று உங்கள் மேல் பழி போடலாம்.
உங்கள் மேல் அவர் பார்வையில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணர முடியும். திடீரென்று உங்களை தொட்டதற்கெல்லாம் விமர்சனம் செய்து கொண்டே இருப்பார். நீகள் ஆடை உடுத்தும் விதம், நீங்கள் பேசும் விதம், போன்றவை அவருக்கு பிடிக்காமல் போகலாம். உங்கள் எடை அதிகரிப்பு அல்லது உங்கள் வடிவ மாற்றங்கள் போன்றவற்றை விமர்சித்து உங்களை கவலை கொள்ளச் செய்யலாம். நீங்கள் வீட்டை நிர்வகிப்பது பற்றி கேலி செய்யலாம். நீங்கள் பணியிடத்தில் அதிக நேரம் செலவிடுவதாகவும் , குழந்தைகளிடமும், தன்னிடமும் குறைந்த நேரம் செலவிடுவதாகவும் குறை சொல்லலாம். நீகள் மிகவும் குறைவாக சம்பாதிப்பதாக சொல்லலாம். அல்லது உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் பற்றி கருத்து தெரிவிக்கலாம். உங்களை விட்டுவிட்டு புதிய உறவை நோக்கி செல்லும் எல்லா அஸ்திரங்களையும் அவர் உங்கள் மேல் பயன்படுத்தலாம்.
ரகசியமான மனிதராக மாறலாம்
அவரின் ரகசிய செய்கைகள் அவர் மாற்றத்தை உங்களுக்கு உணர்த்தலாம். அலைபேசி அழைப்பு வந்தால் வீட்டில் இருக்கும் அதிக சத்தம் காரணமாக அதை எடுத்துக் கொண்டு வேறு இடத்தில் சென்று பேசுவது ஒரு தவறு இல்லை. ஆனால் எல்லா அழைப்பிற்கும் இதே முறையை பின்பற்றினால் அது சந்தேகத்தை உருவாக்கும். அப்படி நிகழ்ந்தால், அவர் உங்கள் முன், பேசுவதை தவிர்க்கிறார் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒவ்வொரு முறை அலைபேசி அழைக்கும்போதும், ஓடிச் சென்று போனை ஆன் செய்து, வேறு ஒரு அறைக்கு அல்லது வீட்டின் மற்ற பகுதிகளுக்கு சென்று பேசலாம். அல்லது நீங்கள் அருகில் இருந்தால், அலைபேசி அடித்துக் கொண்டே இருந்தாலும் அதனை எடுக்காமல் அப்படியே விடலாம். திடீரென்று இத்தகைய மாற்றம் ஏற்பட்டால் இவை கவனிக்கத் தகுந்த மாற்றங்கள் ஆகும்.
உங்கள் கணவர் அலைபேசிக்கு பாஸ்வர்ட் போட்டு லாக் செய்யலாம். அந்த பாஸ்வர்ட் என்ன என்பதை உங்களுக்கு பகிராமல் இருக்கலாம். இதற்காக அவர் கூறும் காரணங்கள் மிகவும் போலியானவையாக இருக்கலாம். அலுவலக மின்னஞ்சல் மிகவும் முக்கியமானது என்று கூறலாம். அலுவலக விஷயங்கள் தொடர்பான தகவல்கள் போனில் இருப்பதாக கூறலாம். போனை ஒருவேளை லாக் செய்யாமல், ஒவ்வொரு முறை போன் பேசி முடித்தவுடன் அழைப்பு வந்த எண்ணை அழித்து விடுவது, போனில் உள்ள தகவல்களை உடனுக்குடன் அழிப்பது போன்றவை குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள். பொதுவாக அலைபேசி பயன்படுத்துபவர்கள், அதன் மெமரி நிறையும் வரை தகவல்களை அழிப்பதில்லை. இதற்கு மாற்றாக ஒவ்பொரு முறையும் அவர் தகவல்களை அழித்தால், உங்களிடம் எதையோ மறைக்கிறார் என்பது புலனாகிறது.
நீங்கள் அறையினுள் நுழைந்ததும், அவர் பார்த்துக் கொண்டிருந்த கணினி காட்சியை மறைக்கலாம். அல்லது நீங்கள் அவர் அருகில் இருப்பதை யூகித்து குறைவான ஒலியில் பேச நினைக்கலாம். மெதுவாக பேசினால் அல்லது சிரித்தால், அல்லது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று நோட்டம் விட்டால் அவரை சந்தேகிக்கலாம்.
உங்கள் கணவர் உங்களை விட்டு தொலை தூரம் செல்வதற்கான ஆயிரம் காரணங்களை உங்களுக்கு சொல்லலாம். நிறைய நேரம் உங்கள் கணவர் கூறும் வார்த்தைகளில் உண்மை இருக்கலாம். அதுவே திடீரென்று ஏற்படும் அவரின் மாற்றம் நிச்சயமாக வேறொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக மட்டுமே இருக்கும்.
வீட்டில் இருந்து வெளியில் செல்லவும், உங்களை விட்டு விலகி இருக்கவும் எப்போதும் எதாவது ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆபிசில் அதிக வேலை , ஜிம்மில் கடுமையான பயிற்சி என்று எதாவது ஒரு காரணத்தைக் கூறி உங்களைத் தவிர்க்கலாம். புதிய பழக்கத்தை ஏற்படுத்தி அதில் நேரத்தை செலவு செய்யலாம். எது எப்படி இருந்தாலும் அவருடைய எண்ணம் உங்களை விட்டு, உங்கள் வீட்டை விட்டு விலகி இருப்பது மட்டுமே. தொடக்கத்தில் மிகக் குறைந்த அளவு மட்டுமே வீட்டை விட்டு செல்லும் அவர், அந்த உறவில் ஆழமாக இறங்கும்போது உங்களை முற்றிலும் புறக்கணிக்கலாம்.
தொடர்பு கொள்வது
உங்கள் துணைவர் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்தால், அவர் வெளியில் இருக்கும் நேரத்தில் அவரைத் தொடர்பு கொள்வது மிகவும் கடினமாக இருக்கலாம்.
வேலை காரணமாக வெளியில் பயணம் செல்வதாகக் கூறலாம். எங்கு போகிறார் என்பதை சரியாக சொல்லலாம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள ஒரு எண்ணை கொடுக்காமல் போகலாம் அல்லது நீங்கள் அவரை அழைக்கும்போது அழைப்பை ஏற்காமல் இருக்கலாம்.
உங்கள் கணவர் வேறு தொடர்பில் இருக்கும்போது சில காரணங்களை உங்களுக்கு கூறலாம். “நான் மீட்டிங்கில் இருப்பேன். அதனால் உன் அழைப்பை ஏற்க முடியாது. நானே உன்னை அழைக்கிறேன்” போன்ற வாக்குறுதிகளை கொடுக்கலாம். அல்லது “இந்த வார இறுதியில் நான் முக்கியமான வேலையாக செல்கிறேன். அதனால் நீ எண்ணெய் அழைக்க வேண்டாம்” என்று கூறலாம். “எனக்கு சிக்னல் கிடைக்காது. அதனால் உன்னால் என்னை தொடர்பு கொள்ள இயலாது” என்று கூறலாம். “நான் வெளியில் இருப்பதால் நீ அழைத்தால் எனக்கு கேட்காது ஆகவே மெசேஜ் அனுப்பு நான் பதில் சொல்கிறேன்” என்று கூறலாம்.
மிகவும் பாசமாக மாறுவார்
திடீரென்று உங்கள் கணவர் உங்கள் மேல் அன்பு மழை பொழியத் தொடங்குவார். அவர் உங்களை ஏமாற்றுவதால் உண்டாகும் குற்ற உணர்ச்சியைக் குறைக்க இப்படி நடந்து கொள்வார்.
உங்கள் துணைவர் உங்களுக்கு பரிசு, பூக்கள் என்று பல பொருட்களை கொடுத்த வண்ணம் இருப்பார், குறிப்பாக மற்றவர்கள் முன்னிலையில் . சில நேரம், இதற்கு மாற்றாக அவர் உண்மையிலேயே அவருடைய அன்பை வெளிபடுத்தும் விதமாகவும் இதனைச் செய்யலாம்.
உங்கள் கணவர் உங்களுக்கு பரிசு பொருட்கள் தருவது மட்டுமல்ல, உங்களுடன் அதிக நேரம் செலவழிக்கத் தொடங்குவார். அதிக நேரம் உங்களுடன் இல்லாவிட்டாலும், இருக்கும் நேரத்தில் உங்களிடம் அன்பாகப் பழகுவார். உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள், உங்களுக்கு பிடித்த உணவகம் , சினிமா போன்றவற்றில் உங்களுடன் இணைந்து நேரம் செலவழிப்பார். இது எல்லாமே அன்பான கணவன் செய்யும் செயல்கள் தான். இருந்தாலும் இவற்றில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் புலனாய்வு செய்து அதனை கண்டுபிடிக்கலாம்.
உள்மனம்
ஒரு பெண்ணாக, மனைவியாக உங்கள் கணவரைப் பற்றிய உங்கள் உள் மனம் தெரிவிக்கும் விஷயங்கள் பெரும்பாலும் சரியானவையாக இருக்கக்கூடும். நீங்கள் பொறாமைக் குணம் இல்லாதவராக, எதையும் தவறாக நினைக்கக்கூடியவராக இல்லாதவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் உள்மனம் சொல்லும் உங்கள் கணவரின் மாற்றங்களைப் பற்றிய உண்மைகளை கவனிக்கத் தவற வேண்டாம்
உங்களுக்கு திருமணமாகி நீண்ட காலம் ஆகி இருந்தால், உங்கள் கணவரைப் பற்றி முழுவதும் தெரிந்து வைத்திருப்பீர்கள். அவருக்கு எது சந்தோசம், எது அவரை ரிலாக்ஸ் செய்யும் எந்த செயலை அவருக்கு எப்படி செய்ய வேண்டும் என்று எல்லாவற்றையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஆகவே அவருடைய நடத்தையில் உண்டாகும் மாற்றங்களை எளிதில் உங்களால் கடுபிடிக்க முடியும். உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உங்கள் கணவரிடம் உண்டான மாற்றத்தை உங்களால் உணர முடியும். அது என்ன என்பதை உங்களுக்கு விளக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயமாக மனதளவில் உங்களால் அந்த மாற்றத்தை உணர முடியும்.
பாலியல் தொடர்பு
கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தால் உங்களுடன் பாலியல் தொடர்பு கொள்ள விரும்பமாட்டார். முந்தைய காலங்களைப் போல் அதில் அவருக்கு விருப்பம் இருக்காது.
புதிய உறவில் ஏற்படும் சந்தோஷத்தால் அவருக்கு உங்களுடன் சந்தோஷமாக இருக்க பிடிக்காது. ஒருவேளை உங்கள் கணவர் உண்மையிலேயே சோர்வாக இருந்தால், அடுத்த சில நாட்களில் பழைய நிலைக்கு திரும்பலாம்.
ஒரு சிலர் வேறொரு பெண்ணுடன் இருக்கும் தொடர்பால் தன் துணையுடன் கூட அதிக விருப்பத்துடன் பாலியல் தொடர்பில் ஈடுபாடு செலுத்தலாம். ஒரு புதிய உறவில் அதிக ஆழம் பயணிக்கும்போது , ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டீரோன் அளவு அதிகரித்து பாலியல் விருப்பங்கள் அதிகரிக்கும்.
ஒரே பெயரை திரும்ப திரும்ப அழைப்பது
உங்கள் கணவர், அவருடைய உரையாடல்களில் அடிக்கடி ஒரே பெயரை திரும்ப திரும்ப சேர்த்துப் பேசலாம். இதன்மூலம் அவருக்கு அந்த பெயரில் ஒரு ஈர்ப்பு இருப்பது தெரிய வரும். ஆரம்பத்தில் அதிகம் உச்சரிக்கும் ஒரு பெயரை, நீங்கள் கவனிக்கத் தொடங்கியவுடன் மெதுவாக மென்று முழுங்கத் தொடங்குவார்.
ஒரு படம் பார்க்கும்போது, திடீரென்று அதில் நடிக்கும் நடிகர் ஒருவரைப் போல் அவருடைய நண்பர் இருப்பதாக கூறுவார். அல்லது அவரை போல் தாமும் பிட்டாக இருக்க வேண்டும் என்று கூறுவார்.
என்ன செய்ய வேண்டும்?
உங்கள் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை நீங்கள் உணர்ந்தால் கோபப்பட்டு அதிரடி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் , ரிலாக்ஸ் செய்து கொண்டு, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசியுங்கள். கீழே கூறியுள்ளவற்றைப் படித்து சில குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த நிகழ்வுக்கான சரியான ஆதாரத்தை கண்டுபிடியுங்கள். உங்கள் கணவரிடம் இது பற்றி கேட்கும்போது மறுத்தால் அவர் கண்முன்னே அந்த ஆதாரத்தை வைத்து நிருபிக்கலாம். அவர் உங்கள் பேச்சை கவனிக்கத் தவறினால், அவர் யார் சொன்னால் கேட்பாரோ அவரிடம் இந்த செய்தியை வெளிபடுத்துங்கள்.
அவர் அந்த தொடர்பை துண்டிக்காவிட்டால், உங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்றும் உங்களுடன் குழந்தைகளை கூட்டிச் செல்வதாகவும் கூறுங்கள். பொதுவாக இந்த நிலையை எந்த ஒரு கணவனும் ஏற்க மாட்டார்கள். அவர்கள் தவறை உணர்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
கவுன்சிலிங்
தன்னுடைய கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று அறிவது மிகவும் துயரமான ஒரு தருணமாகும். ஆனால் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் உண்மையை தீர விசாரித்து ஒரு முடிவுக்கு வரலாம். அவருக்கு உண்மையிலேயே அப்படி எதாவது தொடர்பு உள்ளதா நீங்களாக எதாவது கற்பனை செய்து கொள்கிறீர்களா என்பதை உணர்ந்து அவரிடம் இதமாக பேசி அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் இந்த சூழ்நிலையை கடந்து வந்ததுண்டா? ஆம், என்றால் அது பற்றி எங்களுடன் உங்கள் உணர்வுகளை மற்றும் குறிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நம்பிக்கையை தொலைத்த கணவரை அணுகுவது எப்படி என்று மற்ற பெண்களும் அறிந்து கொள்ளலாம்.