Loading...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சாரதி உள்பட பயணிகள் பலர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் பரந்தனில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்ப்பு நோக்கி பயணித்த பேருந்து பரந்தனில் ஏ9 வீதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
Loading...
சம்பவத்தில் சாரதி உள்பட பலர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
Loading...