தூத்துக்குடி அருகே தலையில் கல்லை போட்டு பெண்ணை கொலை செய்து உடலை எரித்த தாயை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி புதுக் கோட்டை அருகே உள்ள மேல கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்து பேச்சியம் மாள் (வயது 35). இவரது கணவர் ஆனந்த். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுக்கு மேல் ஆகிறது. நவீன், பரத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். முத்துபேச்சியம்மாள் மேலகூட்டுடன்காட்டில் உள்ள தனது தாய் வீட்டில் மகன்களுடன் வசித்து வந்தார்.
முத்துபேச்சியம்மாளின் மகன்கள் இருவரும் பள்ளிக்கு செல்கின்றனர். அவரது தாய் பார்வதி கூலிவேலைக்கு சென்று வந்தார். இதனால் முத்துபேச்சியம்மாள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் முத்துபேச்சியம்மாளின் நடத்தை சரியில்லை என பார்வதியிடம் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள் ளனர். இதையடுத்து முத்து பேச்சியம்மாளை பார்வதி பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் முத்துபேச்சியம்மாள் தனது நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை என கூறப் படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் அனைவரும் வீட்டினுள் படுத்து தூங்கி னர். தனது மகளின் நடத்தையை நினைத்து ஆத்திரமடைந்த பார்வதி இன்று அதிகாலை நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தனது மகளின் தலையில் அம்மிக் கல்லை தூக்கிபோட்டார். இதில் முத்து பேச்சியம்மாள் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவர் தற்கொலை செய்துகொண்டது போல் காட்டுவதற்காக அவரது உடலை பார்வதி தீ வைத்து எரித்தார். இந்நிலையில் முத்துபேச்சியம்மாள் இறந்தது குறித்து அக்கம்பக்கத்தினருக்கு இன்று காலை தகவல் தெரிந்து வீட்டின் முன் திரண்டனர். அவர்களிடம் முத்துபேச்சியம்மாள் தற்கொலை செய்து கொண்ட தாக பார்வதி நாடகமாடினார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். ஆனால் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் உள்ளிட்டவற்றை சேகரித்த போலீசார், முத்துபேச்சியம்மாள் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் தாய் பார்வதியிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
முன்னுக்குபின் தகவல் கூறிய பார்வதி இறுதியில் தனது மகளை கொன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். முத்துபேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக் குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகளை தாயே கொன்று விட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. * * * கொலை செய்யப்பட்ட முத்துபேச்சியம்மாள் பிணமாக கிடக்கும் காட்சி.