நடிகர் ஆர்யா 2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் பல வருடங்களாக திருமணம் செய்யாமல் இருந்து வந்தார். இவருக்கு திருமணம் செய்வதற்காகவே எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியும் நடந்தது.
ஆனால் அந்த நிகழ்ச்சியின் கடைசி ரவுண்ட் வரை 3 பெண்களை வரவைத்து யாரையும் திருமணம் செய்யாமல் நிகழ்ச்சியை முடித்தனர். நடிகர் ஆர்யா தனது திருமணம் தொடர்பான பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காதலர் தினத்தன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சாயிஷாவுடன் தனக்கு நடைபெறவிருக்கும் திருமணம் குறித்து பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில், ஆர்யா, சாயிஷா திருமணம் குறித்து இருவீட்டார்களும் பேசி முடிவெடுத்துள்ளதாகவும், வரும் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்கள் இஸ்லாமிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் ஆர்யா-சாயிஷா திருமண அழைப்பிதழ் அச்சாகி விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் 100 பத்திரிக்கைகள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளதாகவும், திரையுலகில் சுமார் 10 முதல் 15 பேருக்கு மட்டுமே ஆர்யா அழைப்பு விடுத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
Happy Valentines Day ? #Blessed ? @sayyeshaa pic.twitter.com/WjRgOGssZr
— Arya (@arya_offl) February 14, 2019