எந்தவொரு கட்டத்திலும் உடன்பாடற்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை பிரித்தானியா அனுமதிக்காது என பாதுகாப்பு அமைச்சின் அரசாங்க அமைச்சர் ரொபியஸ் எல்வுட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய ஊடக நிகழ்ச்சியொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரெக்ஸிற் தாமதிக்கப்படினும், இன்றேலும் உடன்பாடற்ற பிரெக்ஸிற் எந்த சந்தர்ப்பத்திலேனும் நிறுத்தப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.
பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் திட்டம் நாடாளுமன்றத்தில் மீண்டும் நிராகரிக்கப்படும் பட்சத்தில், உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிட்டும்.
இந்நிலையில், பிரதமரின் திட்டத்திற்கு பெரும்பான்மை ஆதரவை பெறுவதற்கு இலகு பிரெக்ஸிற்றை கையாள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்.
பிரதமர் மே-யின் பிரெக்ஸிற் திட்டம் மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.