Loading...
17 வயதுடைய இளைஞன் ஒருவன் RATP அதிகாரியை கடித்து குதறியுள்ளான். காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, பெப்ரவரி 25 ஆம் திகதி இச்சம்பவம் கார்-து-நோரில் இடம்பெற்றுள்ளது. Groupe de protection et de sécurisation des réseaux (GPSR) எனும் தனியார் பாதுகாப்பு நிறுவனம் RATP குழுமம் முழுவதுக்கும் பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில் குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரியே இவ்வாறு கடிக்கப்பட்டுள்ளார்.
வலது கையின் கட்டை விரலை சரமாரியாக கடித்துள்ளான். சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக மேலும் இரு அதிகாரிகள் இணைந்து இளைஞனை மடக்கி பிடித்து கைது செய்து, காவல்துறையினரிடம் ஒப்படைந்துள்ளனர். வழக்கும் RATP தரப்பில் பதியப்பட்டுள்ளது.
Loading...