தன்னை பௌத்த மத விரும்பும் நபராக தென்னிலங்கை ஊடகங்களில் வெளிப்படுத்தும் அவர், சிங்கள ஊடகங்களில் ஒளிபரப்பாகும் நேரலை விவாத நிகழ்வுகளில் பங்கேற்று, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவரையும் விமர்சித்து வருகிறார்.
அத்துடன், சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் இளைஞர்கள் தொடர்பில் பொலிஸாரையும் அவர் விமர்சித்து வருகிறார்.
தமிழ் மக்கள் போராட்டத்தை விமர்சித்தும் சமஷ்டித் தீர்வை தமிழ் மக்கள் கோரவில்லை எனக் குறிப்பிட்டு தென்னிலங்கை ஊடகங்களில் பிரபலமாகியுள்ள அருளானந்தம் அருண் யார் என்பது பற்றி புலனாய்வு செய்தி அறிக்கைப் பிரிவு ஆராய்ந்தது.
மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் வயோதிப் பெண் ஒருவரிடம் 10 லட்சம் ரூபா அல்லது அதற்கு அண்மித்த தொகைப் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றினார் என்று அருளாந்தன் அருண் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பணத்தை அவருக்கு வழங்கிய வயோதிபப் பெண் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். எனினும் அந்த வழக்கில் எதிராளியான அருண் முன்னிலையாகத்தால், அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட வயோதிப பெண்ணால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் அருணுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்குத் தொடர்பான நீதிமன்ற அழைப்புக்கு அருண் மன்றில் முன்னிலையாகவில்லை.
அதேவேளை, 79 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அருளானந்தம் அருண் மீது, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணைக்கு அருணை கடந்த 28ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் அந்த வழக்கிலும் அருண் மன்றில் முன்னிலையாகத்தால் வழக்கு மே வரை ஒத்திவைக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கான அழைப்புக்கட்டளை அனுப்ப மன்று மீளவும் உத்தரவிட்டது.
நீதிமன்றங்களிலிருந்து சென்ற அழைப்புக்கட்டளைகளை நேரலை ஒளிபரப்புகளில் காண்பித்து செவ்வி வழங்கும் அருளானந்தம் அருண், நீதிமன்றங்களில் முன்னிலையாகாமல் ஒளிந்து வருகிறார். இவ்வாறு குற்றவியல் வழக்குகளில் உள்ள ஒருவரை தமிழ் ஹீரோவாக சித்தரித்து அவரைக் கொண்டு தமிழ் மக்களின் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் விமர்சிக்க வைக்கும் தென்னிலங்கை ஊடகங்களின் நோக்கம் என்ன?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவரையும் தமிழ் மக்களின் போராட்டத்தையும் விமர்சித்து அருளானந்தம் அருண், போதைப்பொருள் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டு வழக்குகளில் நீதிமன்றங்களில் முன்னிலையாகமல் ஒளிந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
சிங்கள ஊடகங்களில் இவன் வழங்கும் செவ்விகளை பல தமிழ் இணைய ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன.
இவன் யாழ் ஊடக அமையத்தில் இவன் பேட்டி கொடுத்தன் பின்னரே இவனை தென்பகுதி ஊடகங்கள் கருத்தில் எடுத்திருந்தன. யாழ் ஊடக அமையம் இவ்வாறான பல கேவலங்களை செய்து வருவது கண்டிக்கத்தக்கது என மூத்த ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.