பிரித்தானியாவை பாரிய புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
Freya என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் தாக்கும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பிரித்தானியாவின் பல பகுதிகளில் நாளையும் நாளை மறுதினமும் பாரிய ஆபத்துக்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை மிக அதிக வெப்பமாக காலநிலை பதிவானது. அதிக வெப்பத்துடன் கூடிய காற்றும் காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு புயல் காற்று வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Freya புயல் இன்று கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள பிரித்தானிய தீவுகளுக்கும் நகரும் என வானிலை ஆய்வு மையத்தின் துணை தலைமை வானிலை ஆய்வாளர் Jason Kelly தெரிவித்துள்ளார்.
புயலின் தாக்கம் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுள்ளது.
வலுவான காற்று கட்டடங்கள் மற்றும் மரங்களில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தக் காற்று பாரிய கடல் அலைகளை ஏற்படுத்தும் எனவும் Jason Kelly தெரிவித்துள்ளார்.
#StormFreya will bring very #windy weather to the UK on Sunday and into Monday. Stay #weatheraware pic.twitter.com/p0lIlOEyRQ
— Met Office (@metoffice) March 1, 2019