திருகோணமலை, நான்காம் கட்டை பகுதியிலுள்ள மத வழிபாட்டு தளமொன்றுக்குள் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இன்றிரவு இளைஞரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உப்புவெளி குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஹேரத் என்பவருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மத வழிபாட்டு தளத்திற்குள் இருந்த இளைஞனை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 530 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தை சேர்ந்த டிலீப மதுசங்க என்ற 32 வயதுடைய எனவும் தெரியவருகின்றது.
குறித்த சந்தேக நபர் மத வழிபாட்டு தளத்துக்குள் தொடர்ச்சியாக ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வருபவர் எனவும் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் மத வழிபாட்டு தளங்களை சோதனையிட வர மாட்டார்கள் என கூறி விட்டு இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.
ஆனாலும் குறித்த சந்தேக நபரை கைது செய்யும் போது மத வழிபாட்டு தளத்துக்குள் சென்று வர அனுமதி தருமாறும் பொலிஸாரிடம் கூறப்பட்டதாகவும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இளைஞரை விசாரணை செய்து வருவதுடன் நாளைய தினம் நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்