ஆணும் பெண்ணும் எதிர் எதிர் துருவங்கள் என்பார்கள். அதனால் தான் என்னவோ இருவருக்கிடையே எப்பொழுதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். ஒரு ஆண் ஒரு பெண்ணின் இதயத்தை கொள்ளையடிக்க அழகான பாராட்டு, பரிசுகள் என்று நிறைய செய்யத் துணிகின்றான்.
இப்படி ஒரு பெண்ணை பாராட்டி பேசும் போது அது அவளுக்கு புதிதாக யாரும் சொல்லாத பாராட்டு மொழி என்றால் கண்டிப்பாக பிடிக்கும். நீங்கள் பொய் சொன்னாலும் அதை பெண்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.
ஆணும் பெண்ணும்
பொதுவாக பெண்களை பாராட்டுவதற்கு அவர்களின் தோற்றம் தான் தெரிகிறது. “நீ அழகாக இருக்க, உன் கண்கள் அழகாக இருக்கு, இது போன்ற பாராட்டுகளைத் தான் ஆண்கள் பெண்களுக்கு அதிகமாக வழங்குகின்றனர். ஆனால் பாராட்டு தோற்றத்தை மட்டும் சொல்லாமல் அவர்களின் குணங்கள், ஆளுமை திறன், நகைச்சுவை உணர்வு இவற்றை கொண்டு கூட நீங்கள் பாராட்டலாம். இப்படி பாராட்டும் போது பெண்ணின் மனதை கவர்வதோடு உங்களின் மீதும் ஒரு நம்பிக்கை பிறக்கும். அப்புறம் என்ன அவர்களுக்கு உங்களை பிடிப்பதும் எளிதாகி விடும்.
அப்படி பாராட்டப்பட வேண்டிய விஷயங்களை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.
தோற்றம்
ஒரு அழகான பெண்னை நீங்கள் பார்த்தவுடன் ” நீ ரெம்ப அழகா இருக்க” என்று சொல்லலாம். ஆனால் இது போன்ற பாராட்டுகள் அவர்கள் ஏற்கனவே நிறைய தடவை கேட்டதாக இருக்கலாம். எல்லாரும் சொன்ன ஒரு பாராட்டு வார்த்தைகள் அவர்களுக்கு பெரியதாக தெரியாது. அதுவே நீங்கள் ” ரெம்ப வருடங்களாக அப்படியே அழகாக இருக்கிறீர்கள்” இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம். இதைத் தான் பெண்களும் விரும்புகின்றனர் என்று பிரிட்டிஷ் ஆய்வு கூறுகிறது.
நகைச்சுவை உணர்வு
பெண்களுக்கு அவர்களின் காதலன் அவர்களுடைய நகைச்சுவை உணர்வை பாராட்டுவது மிகவும் பிடிக்கும்.” உன்னுடன் இருக்கும் நேரம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.”
“மேலும் நீ புத்திசாலி ஏனெனில் புத்திசாலி மனிதர்கள் நகைச்சுவை உணர்வு கொண்டு இருப்பார்கள்.என்று அவர்களை பாராட்டலாம். இதனால் அவர்களும் மிகுந்த சந்தோஷம் அடைவதோடு உங்கள் உறவும் வலிமையாகும்.
பேஷன் ஸ்டைல்
அவர்கள் அணியும் ஆடைகள் மற்றும் அவர்கள் இசை கேட்கும் ஸ்டைல் இது குறித்து கூட நீங்கள் புகழலாம். “நீ அணிந்திருக்கும் கம்மல் உன் ஆடைக்கு பொருத்தமாக அழகாக இருக்கிறது”, ” ஆடைகளை நன்றாக தேர்வு செய்கிறாய்” இது போன்ற இனிப்பான வார்த்தைகள் மூலம் இன்னும் உங்கள் காதலை வெளிப்படுத்தலாம்.
விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு
எல்லாருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும். அதே போல் பெண்களும் நிறைய விஷயங்களில் ஆர்வமாகவும், விடா முயற்சியுடனும் செயல்படுவர். அப்படி அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்யும் போது பாராட்டுங்கள். உங்கள் காதலி ஒரு விளையாட்டு வீரர் என்றால் ” உன்னால் முடியும், நீ திறமையாக விளையாடுவாய்”, என்று சொல்லுங்கள். இது அவருக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். உங்கள் காதலி சிறந்த கடின உழைப்பாளி என்றால் ” நீ திறமையாக வேலை செய்கிறாய், கண்டிப்பாக உனக்கு பெரிய பதவி கிடைக்கும்”, என்று பாராட்டுங்கள். அன்பான ஒருவரின் பாராட்டு தான் அவர்கள் சாதிக்க தேவை. எனவே இதை மறந்து விடாதீர்கள்.
திறமை
சில பெண்கள் நடனம், ஓவியம் வரைதல், பாட்டு பாடுதல் போன்ற தனித் திறமைகளை வைத்து இருப்பார்கள். அதை நீங்கள் அலட்சியப் படுத்தாமல் அன்பானவராக நீங்கள் அதை பாராட்டி மகிழலாம். ” நீ எனக்கு ஒரு பாட்டு பாடு”, என்று கூறி அவர்களை உற்சாகப்படுத்தலாம். உங்கள் துணை வரைந்த ஓவியங்களை ப்ரேம் போட்டு அவர்களுக்கு பரிசாக வழங்கலாம்,” அவர்கள் ஓவியம் வரைவதற்கான பொருட்களை வாங்கி கொடுக்கலாம், ஓவியப் போட்டி, பாட்டு போட்டி போன்றவற்றிற்கு அழைத்து சென்று அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கலாம். ஒவ்வொரு பெண்ணும் விரும்புவது இது தாங்க. உங்களின் சிறிய பாராட்டு அவர்களின் தனித் திறமைகளை மேலும் வளர்த்து கொள்ள உதவும்.
குரல்
உங்களுடைய துணைக்கு இனிமையான குரல் என்றால் அதை பாராட்டுங்கள், ” உன்னுடைய குரல் எனக்கு விருப்பமான ஒன்று”, என்னுடன் கேட்கும் போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் இது போன்ற பாராட்டுகளை அவர்களுக்கு கொடுக்கலாம். இது அவர்கள் தயக்கமின்றி உங்களுடன் பேச உதவும். மேலும் இந்த பாராட்டு அவர்கள் மனதை கவரும். இதனால் உங்களுக்கிடையே யான உறவு நீடிக்கும்.
கூந்தல்
ஆண்கள் அரிதாக கவனிக்கும் விஷயம் பெண்களின் கூந்தல். ஆனால் பெண்கள் தங்களுடைய கூந்தல் குறித்து நிறைய கவலையுறுகின்றனர். அவர்கள் தங்கள் கூந்தலுக்கு புதிதாக கலரிங்கோ, ஹேர் ஸ்டைலோ செய்து இருந்தால் கவனியுங்கள். உங்களை கவரும் நோக்கில் தான் அதை செய்து இருப்பார்கள். அதை நீங்கள் கவனிக்கா விட்டால் வருத்தமடைவார்கள். ” உன் முகத்திற்கு இந்த ஹேர் ஸ்டைல் அழகாக இருக்கிறது”, உன் கூந்தல் மென்மையாக இருக்கிறது” போன்ற பாராட்டுகளை நீங்கள் உதிர்க்கலாம்.
ஆளுமை பண்பு
உங்கள் துணை துணிச்சலான குணங்கள் கொண்டு இருந்தால் பாராட்டுங்கள், அவர் செய்யும் தைரியமான வேலைகளை பாராட்டுங்கள். அவர்களின் இரக்க குணங்கள் போன்றவற்றை பாராட்டுங்கள் இது அவரது ஆளுமை பண்பை மேலும் வளர்த்துக் கொள்ள உதவும்.
பாராட்டுகள் ஒருவரை மிகுந்த உற்சாகப்படுத்தும். அதிலும் அன்பானவர்கள் பாராட்டும் போது மனதிற்கு மகிழ்வாக இருக்கும். எனவே இனி உங்கள் துணை செய்யும் காரியங்களுக்கு பாராட்டை பரிசாக கொடுங்கள். கண்டிப்பாக அவர்களின் இதயம் உங்களுக்காக உருகும்.